ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
இதற்காக அனைத்துக் கட்சிகளும் விறுவிறுப்புடன் செயல்பட்டுவருகின்றன. குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி வித்தியாசமான அரசியல் பார்வையோடு தனது தேர்தல் யுக்திகளை வகுத்து களமாடிவருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, அக்கட்சியின் வேலூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள தீபலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பெரிய கட்சிகள் பணத்தை நம்பி தேர்தலை சந்திக்கின்றன: நாங்கள் கொள்கை அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறோம் என தெரிவித்தார்.
மேலும், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுக்க தான் குரல் கொடுப்பேன் என அவர் உறுதியளித்தார்.