ETV Bharat / state

‘எத்தனை துரோகங்கள் அரங்கேறினாலும் இறுதிவரை திமுகவுக்கு உழைப்போம்’ - துரைமுருகன் கண்ணீர்!

வேலூர்: எத்தனை துரோகங்களை சந்தித்தாலும் நானும் எனது மகனும் இறுதி மூச்சு உள்ளவரை திமுகவுக்காக உழைப்போம் என திமுக பொருளாளர் துரைமுருகன் தொண்டர்களிடையே கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

durai
author img

By

Published : Jul 19, 2019, 9:16 AM IST

Updated : Jul 19, 2019, 10:54 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவை திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஏ.வ.வேலு, திமுக பொருளாளர் துரைமுருகன், வேலூர் மக்களவை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தனக்கு எதிராக யார் சதி செய்தார்கள் என்பதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை என்றும், பல்வேறு துரோகங்களை சமீபத்தில் சந்தித்ததாகவும் அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.

அத்துடன், அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் பணம் பதுக்கி வைத்து, வருமான வரித்துறையினரைக் கொண்டுவந்து தன் வீட்டில் உட்கார வைத்தது யார்? ஒரு நபரை வைத்து தன் மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது யார்? இப்போது செய்யும் தேர்தல் செலவைக் கணக்கிட எங்கள் வீட்டில் ஓய்வு பெற்ற அதிகாரியை பணியில் அமர்த்தியது யார்? தங்கள் வீட்டின் வேலைக்காரர்களிடம் ரகசியமாக தொலைபேசி கொடுத்தவர் யார்? தன் ஒரே மகனைப் பற்றி பேசிய அந்த எதிரி யார்? மொத்தத்தில் தனக்கு இத்தனை துரோகங்களை இழைத்தது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர் தனக்கு எல்லாமே தெரியும் என தொண்டர்களிடையே கண்ணீர் மல்க பேசினார்.

துரைமுருகனின் ஆவேச பேச்சு

இறுதியாக எத்தனை துரோகம் தனக்கு எதிராக அரங்கேறினாலும், தானும் தனது மகனும் இறுதிவரை திமுகவிற்காகவே உழைப்போம் என்று ஆவேசமாகப் பேசினார்.

Intro:
எதற்காக வீணாக பணம் செலவு செய்ய வேண்டும். ஒரு லாரியை வைத்து அடித்தால் முடிந்து போய்விடும் என என் ஒரே மகனை பறித்து பேசியது யார் என திமுக பொருளாளர் துரை முருகன் ஆம்பூரில் தொண்டர்களிடையே கண்ணீர் மல்க உரை.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது இதில் வேலூர் நாடாளுமன்ற திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஏ.வ.வேலு திமுகவின் பொருளாளர் துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் முதலில் பேசிய ஏ.வ.வேலு

நமக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓர் பொய்யானவர், தனது சுய நலத்திற்காகவே அவர் இந்த தேர்தலில் போட்டியிடும் அவர் ஓர் சந்தர்ப்பவாதி இதற்கு முன் அவர் தாமரையில் போட்டியிட்டார் இப்பொழுது இலையிலே போட்டியிடுகிறார், இதைப்பற்றி நீங்கள் திண்ணையில் பேசவேண்டும் பெட்டிக் கடையில் பேச வேண்டும் ஆலமரத்தடியில் பேச வேண்டும்.

நாம் ஆம்பூரில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என கூறினார்.

இதற்கடுத்து பேசிய துரை முருகன்.

இப்போது ஏதோ என் மகனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது அதை சதி செய்தார்கள் அதையெல்லாம் சொல்ல நான் விரும்பவில்லை.

இவ்வளவும் செய்தவர்கள் யார் 60 இடத்தில் நான் பணம் பதுக்கி வைத்திருந்தேன் என்று கூறுகிறார்கள்.

அதை நான் சொல்லட்டுமா என் வீட்டு தோட்டத்தில் பணம் பதுக்கி வைத்து விட்டு அதை வருமான வரித்துறையினரை கொண்டு வந்து என் வீட்டில் உட்கார வைத்தது யார்?,

மேலும் நாங்கள் 5 பேர் வருமான வரித்துறையிலிருந்து வருகிறோம் என்று கூறி எங்கள் வீட்டில் பத்து லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது,இதன் பின் பணம் கைப்பற்றப்பட்டதற்கு பச்சைநாமா கொடுக்கப்பட்டது அதன் சட்டம்.

மேலும் எங்கள் கல்லூரியில் துருவித்துருவி பார்த்தார்கள் அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று கடிதம் ஒன்று கொடுத்தார்கள்.

மேலும் ஒரு நபரை வைத்து என் மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, யார்?

இப்போது நாங்கள் தேர்தல் செலவு செய்கிறோம் இதனை ஒவ்வொரு நாளும் கணக்கிட எங்கள் வீட்டில் ஓய்வு பெற்ற அதிகாரியை தற்போது பணியில் அமர்த்தியது யார்.

ஒரு வாரத்திற்கு முன்பே ஓய்வு பெற்றவரை தற்போது கணக்கு பார்க்கும் பணியில் அமர்த்தி துரோகம் செய்துள்ளார்கள்.

மேலும் எங்கள் வீட்டின் வேலைக்காரர்களிடம் ரகசியமாக தொலை பேசி கொடுத்தவர் யார்? அவர் பேசிய தொலைபேசி குரல்பதிவு என்னிடம் உள்ளது.

மேலும் எதற்காக வீணாக பணம் செலவு செய்ய வேண்டும் ஒரு லாரியை வைத்து அடித்தால் முடிந்து போய்விடும் என என் ஓரே மகனை பறித்து பேசிய அந்த எதிரி யார் யார் என தொண்டர்களிடையே கண்ணீர் மல்க பேசினார்.

Conclusion: மேலும் நான் ஒருபோதும் திராவிடத்தை விட்டு விலக மாட்டேன் எப்போதும் ஓரே கட்சிக்கா உழைப்பேன் என கூறினார்.
Last Updated : Jul 19, 2019, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.