வேலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஆம்பூரைச் சுற்றியுள்ள மிட்டாளம் மலையருகேயுள்ள ஊறல் பகுதியில் 300 அடிக்கும் மேலிருந்து கொட்டும் நீர் வீழ்ச்சி உருவெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால், ஊட்டல் கானாறு, பெரிய வரிகம், சின்ன வரிகம், பத்தரப்பள்ளி மற்றும் குட்டகந்தூர் பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் சில தாழ்வான நிலப்பகுதியில் பெய்த கன மழையால் நிலத்திலிருந்து கிணற்றிற்கு மழை நீர் சென்றுள்ளது. காட்டாறு வெள்ளத்தால் பல தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.