ETV Bharat / state

வேலூரில் முதியவர் மீது சுப்பாக்கிச் சூடு - போலீஸ் விசாரணை - Country gun shoot in vellur to old men

வேலூர்: மாடு மேய்க்க சென்ற முதியவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த அவர், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

vellore
author img

By

Published : Oct 31, 2019, 9:08 AM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (62). இவர் அதே பகுதியில் உள்ள எரியில் தினம்தோறும் மாடு மேய்க்க சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று எரியில் மாட்டை மேய்ச்சலுக்கு விட்டபோது மழை பெய்ததால் அங்குள்ள புதர் பகுதியில் குடை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அப்போது, திடீரென்று அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மணியின் கை, கால், மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதியில் ஐந்து குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருடைய உடலில் இருந்து ஐந்து குண்டுகள் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்ட முதியவர்

இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்காயம் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் பறவைகள் சுடும் நபர்கள் யாராவது, பறவைகளை சுடும்போது தவறுதலாக மணி மீது குண்டுகள் பாய்ந்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: துப்பாக்கியுடன் நடனமாடிய இளைஞர் - வைரலாகும் வீடியோ!

Intro:வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் மாடு மேய்ச்சலுக்காக சென்ற முதியவர் மீது திடீரென நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் அவருடைய உடலில் 5 இடங்களில் சுடப்பட்டு காயங்கள் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுBody:.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் மணி வயது 62 இவர் அதே பகுதியில் திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ள எரியில் தினமும் மாடு மேய்ச்சலுக்கு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம் இந்நிலையில் இன்று எரியில் மாடு மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்குள்ள புதர் பகுதியில் குடை வைத்துகொண்டு அமர்ந்திருந்தார்.திடீர் என்று அவர் மீது நாட்டு துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டுள்ளனர்.இதில் அவருடைய கை ,கால்,மார்பு,இடுப்பு உட்பட உடல் முழுவதும் சுமார் 5 குண்டுகள் பாய்ந்து காயமடைந்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.பின்னர் அவருடைய அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருடைய உடலில் இருந்து 5 குண்டுகள் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் பறவைகள் சுடும் மர்ம நபர்கள் யாராவது பறவைகளை சுடும்போது தவறுதலாக இவர்மீது குண்டுகள் பாய்ந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.