ETV Bharat / state

குடியாத்தம் எம்.எல்.ஏ மீது காவல் நிலையத்தில் புகார்

வேலூர்: அவதூறு பரப்புவதாக திமுக எம்.எல்.ஏ மீது அதிமுக சார்பில் குடியாத்தத்தில் போட்டியிட்ட கஸ்பா மூர்த்தி புகாரளித்துள்ளார்.

திமுக, அதிமுக வேட்பாளர்கள்
author img

By

Published : Aug 24, 2019, 5:03 PM IST

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் காலியாக இருந்த 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மேலும், வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

குடியாத்தம் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக வசமிருந்த குடியாத்தம் தொகுதி திமுகவிற்கு சென்றது. அதன்படி அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் காத்தவராயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தியை தோற்கடித்தார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு ஒருவருக்கு ஒருவர் சமூக வலைதளங்களில் சாடி வந்தனர். குறிப்பாக திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், அதிமுகவைச் சேர்ந்த கஸ்பா மூர்த்தியின் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர் காத்தவராயன்,
திமுக வேட்பாளர் காத்தவராயன்

அதேபோல், பதிலுக்கு கஸ்பா மூர்த்தியும் காத்தவராயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கஸ்பா மூர்த்தி, காத்தவராயன் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார், அந்தப் புகாரில் தன் மீது காத்தவராயன் வீண் அவதூறுகளை பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பதிலுக்கு காத்தவராயனும், தன் மீது அவதூறு பரப்புவதாக கஸ்பா மூர்த்தியின் மீது அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த, சம்பவம் குடியாத்தம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தி,
அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தி

இதுகுறித்து, நமது செய்தியாளர் அதிமுகவைச் சேர்ந்த கஸ்பா மூர்த்தியை தொடர்பு கொண்டு பேசியபோது, ”நான் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளேன் அதில் அராஜக விலையில் பொருட்கள் விற்பதாக என் மீது திமுக எம்.எல்.ஏ காத்தவராயன், அவதூறு பரப்புகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளேன்” என்றார். இதுகுறித்து குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டபோது அவரது மொபைல் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

Intro:குடியாத்தம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அவதூறு பரப்புவதாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மீது அதிமுக வேட்பாளர் காவல் நிலையத்தில் புகார் பதிலுக்கு குடியாத்தம் எம்எல்ஏவும் புகார் அளித்தார்Body:கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் காலியாக இருந்த 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது அதன்படி வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது குடியாத்தம் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது அதாவது 2016 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயந்தி பத்மநாபன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அணியில் இணைந்த ஜெயந்தி பத்மநாபன் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார் இந்த நிலையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக வசமிருந்த குடியாத்தம் தொகுதி திமுகவிற்கு சென்றது அதன்படி அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் காத்தவராயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தியை தோற்கடித்தார் இந்தநிலையில் தேர்தல் முடிவுக்குப் பிறகு குடியாத்தம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வேட்பாளரும் ஒருவருக்கு ஒருவர் சமூக வலைதளங்களில் சாடி வருகின்றனர் குறிப்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசும்போது அதிமுக கஸ்பா மூர்த்தி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைப்போல் பதிலுக்கு கஸ்பா மூர்த்தியும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார் இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்தி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அந்த புகாரில் தன் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் வீன் அவதூறுகளை பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார் இதற்கிடையில் பதிலுக்கு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயனும், தன் மீது அவதூறு பரப்புவதாக கஸ்பா மூர்த்தி மீது அதே குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் குடியாத்தம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த கஸ்பா மூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது அவதூறுகளை பரப்பினார் நான் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளேன் அதில் அராஜக விலையில் பொருட்கள் விற்பதாக என்மீது அவதூறு பரப்புகிறார் நன்றி அறிவிப்பு கூட்டங்களில் பேசும் போதெல்லாம் என்னை பற்றி தேவையில்லாமல் அவதூறு பரப்புகிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளேன் என்றார் இதுகுறித்து குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டபோது அவரது மொபைல் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.