ETV Bharat / state

வேலூரில் காவலர் பயிற்சி நிறைவு விழா! - காவலர் பயிற்சி நிறைவு விழா

வேலூர் : காவலர் பயிற்சிப் பள்ளியில் ஐந்து மாதகால அடிப்படைப் பயிற்சியை முடித்த 284 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா, இன்று நடைபெற்றது.

பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா
பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா
author img

By

Published : Dec 1, 2020, 10:38 PM IST

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஐந்து மாதகால அடிப்படைப் பயிற்சியை முடித்த திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 284 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று (டிச.01) நடைபெற்றது. தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் கூடுதல் இயக்குநர் ஆபாஷ்குமார் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார்.

முன்னதாக நடைபெற்ற பயிற்சி நிறைவுபெற்ற காவலர்களின் அணிவகுப்பை ஏற்ற தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் கூடுதல் இயக்குநர் ஆபாஷ்குமார், சட்ட வகுப்பு, துப்பாக்கி சுடுதல், கவாத்துப் பயிற்சி ஆகிய பாடங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பாக செயல்பட்ட 15 பேருக்கு பதக்கங்களை வழங்கினார். பின்னர் பயிற்சிபெற்ற காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.

இவ்விழாவில் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், காவலர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். பயிற்சி முடித்தவர்களில் 150 பேர் வேலூரிலும், 134 பேர் திருவண்ணாமலையிலும் 15 நாள்கள் ஆயுதப்படையிலும், 15 நாள்கள் காவல் நிலையத்திலும் என 30 நாள்கள் கூடுதல் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். பின்னர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டகளில் காவலர்களாக பணி அமர்த்தப்படுவர்.

பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

இதேபோல் வேலூர் காட்பாடியை அடுத்த சேவூர் பகுதியில் 538 ஆண் காவலர்களுக்கு காவலர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநர் அபய் குமார் சிங் கலந்துகொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.