ETV Bharat / state

‘உள்ளாட்சித் தேர்தல் நடந்தால்தான் கிராமங்கள் பயனடையும்’ - ஜி.கே. வாசன் - ஜி.கே. வாசன் செய்தியாளர் சந்திப்பு

வேலூர்: கிராம ஊராட்சிகள்தான் பஞ்சாயத்துகளின் அடித்தளம் என்றும், தேர்தல் நடைபெற்றால் கிராமங்கள் பயனடையும் எனவும் தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

GK Vasan
GK Vasan
author img

By

Published : Dec 10, 2019, 3:34 PM IST

உள்ளாட்சித் தேர்தல் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகள்தான் பஞ்சாயத்தின் அடித்தளம். இதற்கான முதற்கட்ட தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தேர்தல் நடக்குமேயானல் கிராமம், பஞ்சாயத்து, குக்கிராமங்கள் எல்லாம் பயனடையும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

அதனடைப்படையிலேயே ஆளுகின்ற அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். மறுபுறம் எதிர்க்கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்தத் தேர்தலை சந்திக்க தயங்குகின்றது.

GK Vasan Press Meet

மீண்டும் மீண்டும் நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த நினைப்பது என்பது தேர்தலை சந்திக்க திமுகவும் கூட்டணி கட்சிகளும் தயார் நிலையலேயே இல்லை என்பதைக் காட்டுகிறது.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் தமாகவின் பங்களிப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘ஏற்கனவே அதிமுக கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். அந்த வகையில் முதல் நாளன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை அழைத்து அவர்கள் பேசியிருக்கிறார்கள். தொடர்ந்து அந்தப் பேச்சுவார்த்தை வரும் நாட்களிலே மாவட்ட ரீதியாக தொடரும் வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் - திருமாவளவன் வழக்குத் தள்ளுபடி!

Intro:Body:கிராம ஊராட்சி ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து இது தான் பஞ்சாயத்த்தின் அடிதளம்...

இதற்கான முதற்கட்ட தேர்தலைதான் தேர்தல் ஆணையம் தமிழகத்திலே அறிவித்திருக்கிறது...

இந்த அறிவிப்பின் அடிப்படையில் தேர்தல் நடக்குமேயானல் கிராமம், பஞ்சாயத்து, குக் கிராமங்கள் எல்லாம் பயனடையும் என்பதிலே மாற்றுக்கருத்து கிடையாது...

அதனடைப்படையிலேயே ஆளுகின்ற அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இந்த தேர்தலை சந்திக்க இருக்கின்றோம்...

மறுபுறம் எதிர்கட்சியான திமுகவும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலை சந்திக்க தயங்குகின்றது...

அதற்கு சக்குபோக்குகளை கூறி உச்சநீதிமன்றத்தை மீண்டும் மீண்டும் அனுகி தேர்தலை தடுத்து நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறது.. அப்படி திமுகவும் கூட்டணி கட்சிகளும் நினைப்பது உள்ளாட்சியிலே அவர்கள் வரும் நாட்களிலே நல்லவைகள் அரசு மூலம் நடக்க கூடாது என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே செயல்படுவதாக அர்த்தம் என நான் குறிப்பிடுகின்றேன்...

மீண்டும் மீண்டும் நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த நினைப்பது என்பது தேர்தலை சந்திக்க திமுகவும் கூட்டணி கட்சிகளும் தயார் நிலையலேயே இல்லை என்பது ஒருபுறம் தெரிகிறது...

மறுபுறம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊராட்சிகளுக்கும் பஞ்சாயத்து மற்றும் கிராமங்களுகளின் வளர்ச்சியை கெடுக்ககூடிய நிலையை அவர்கள் எடுக்கிறார்கள் என்பது தெரியவருகிறது...

கர்நாடக தேர்தல் முடிவுகளை பற்றி கேள்வி எழுப்பிய போது....

ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக பாஜாக கட்சிக்கு வாக்களித்தனர்.. 100க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அம்மாநில மக்கள் அளித்தார்கள்.. ஆனால் குறுக்கு வழியிலே காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா கட்சியும் ஆட்சியிடத்திலே ஏறியது...

குறுக்கு வழியிலே ஆட்சியை பிடிப்பவர்கள் நீடிக்கமாட்டார்கள் அதற்கு மக்கள் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்ற ரீதியிலே நேற்றைய தினம் நடந்த இடைத்தேர்தல் முடிவிலே பாஜாக அங்கே மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது...

உள்ளாட்சி தேர்தலில் தமாக பங்களிப்பு பற்றி கேள்வி எழுப்பியதற்கு...

ஏற்கனவே அதிமுக கூட்டணி கட்சிகளோடு பேச தொடங்கி இருக்கிறது அந்த வகையில் முதல்நாளன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை அழைத்து அவர்கள் பேசியிருக்கிறார்கள்.. தொடர்ந்து அந்த பேச்சு வார்த்தை வரும் நாட்களிலே மாவட்ட ரீதியாக தொடரும் வாய்ப்பு இருக்கிறது..

மேலும் பாலியல் தொல்லைகளுக்கு சின்னஞ்சிறு சிறுமிகளும் தப்புவது கிடையாது என்பது வேதனைகூறிய விஷயம்... எனவே இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் முதற்கட்ட விசாரணையிலேயே சரி இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற தெரிந்த உடனே காலம் தாழ்த்தாமல், அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே தமாகாவின் கோரிக்கை....

சட்ட மசோதா பற்றி கேள்வி எழுப்பியதற்கு....

சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்ற குறிப்பிடுகிறோமே அவர்களுக்கு இந்த மசோதா நாட்டில் குடிமகனாக இருப்பதற்கு வழி வகை செய்கிறது, நாட்டின் ஒட்டுமொத்த நலன் காக்கும் வகையில் இந்த மசோதா இருக்கிறது.. இதனை ஜாதி,மதம்,மொழி,இனம் இவைகளை வைத்து யாராவது அரசியல் செய்ய நினைத்தால் அது மக்களிடம் எடுப்படாது....

மேலும் அவர் கூறுகையில்...

தமிழ் ஆட்சி மொழி சட்டப்படி தமிழ் மொழி பெயர் பலகை இருக்க வேண்டும் என்பது தமிழக அரசு இப்பொழுது கட்டாயபடுத்தி இருக்கிறது...

இந்த மாதம் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழி வாரமாக கொண்டாட இருப்பதால் தமிழில் பெயர் பலகை இருப்பதை தமிழக அரசு தொடர் நடவடிக்கை மூலம் உறுதிசெய்து கொள்ளவேண்டும் ....

மத்திய அரசை பொருந்தமட்டில் ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தம் கொண்டுவர முயற்சி செய்தால் அதனால் தொழில் புரிபவர்களுக்கும், பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும், பொருளாதாரத்தில் மேலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறேன்...

மத்திய மாநில அரசுகளுக்கு வருவாய் பெருக்க வரி விதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது,, மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன்....

மேலும் வரியெய்ப்பு செய்ஓரிடம் முறையாக வரி வசூல் செய்து வரி வசூல் செய்யும் நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும்....

மேலும் வெங்கயா விலைப்பற்றி கேள்வி எழுப்பிய போது....

பொருளாதார ரீதியாக உலகளவில் பொருளாதார நிலை இன்றைக்கு தேக்க நிலை சுணக்க நிலை அதனுடைய தாக்கம் இந்தியாவிலும் இருக்கின்றது...

இந்தியாவை பொருத்தவரையில் தொடர்ந்து இந்த சுணக்கத்திலே ஆறு மாதமாக பயணித்து கொண்டிருக்கிறது..

அதன் அடிப்படையிலே மத்திய நிதிதுறை அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்து பல கட்ட நடவடிக்களை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்...

இதனடிப்படையில் படிப்படியாக வருகின்ற மாதங்களிலே இந்த சுணக்கம் தேக்கம் சுமுகமான நிலையை வர வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு மாற்று கருத்து கிடையாது...

வெங்காய விலையினுடைய ஏற்றம் என்பது அதிக மழையும் காரணம் மழை இல்லை என்பதும் காரணம். இதனுடைய தாக்கத்தை குறைக்ககூடிய நிலையை அரசு ஏற்படுத்தி இருக்கிறது வரும் நாட்களில் இது உறுதியாக குறையும் நிலை படிப்படியாக ஏற்ப்பட்டு இருக்கிறது.... என கூறினார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.