திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36ஆக இருந்தது. மேலும் கரோனா பாதிப்புக்குள்ளான வாணியம்பாடி உதயேந்திரம், கோணாமேடு, ஆம்பூர், கடாம்பூர், சோலூர் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராமநாயக்கன்பேட்டை, திருமாஞ்சோலை, ஆலங்காயம், படகுப்பம், கொமிட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்னை, தஞ்சாவூரிலிருந்து வந்த கர்ப்பிணி உள்பட நான்கு பேருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம், மருத்துவ அலுவலர் பசுபதி ஆகியோர் நேரில் சென்று, தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பிரியங்கா காந்தியைக் கிண்டல் செய்த உ.பி. துணை முதலமைச்சர்