ETV Bharat / state

சி.பி.ராதாகிருஷ்ணனிடம் பிரதமர் கேட்ட கேள்வி.. ஸ்ரீபுரம் நாராயணி பீட விழாவில் பகிர்வு! - ராம்நாத்தின் சிறப்புரை

Vellore news: வேலூரில் நடைபெற்ற ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் ஸ்ரீசக்தி அம்மாவின் 48வது ஜெயந்தி விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவரும், ஜார்கண்ட் ஆளுநரும் சிறப்புரை ஆற்றினர்.

ஸ்ரீசக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவில் சிறப்புரையாற்றிய ராம்நாத் கோவிந்த்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 7:37 PM IST

ஸ்ரீசக்தி அம்மாவின் ஜெயந்தி விழாவில் சிறப்புரையாற்றிய ராம்நாத் கோவிந்த்

வேலூர்: ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மாவின் 48வது ஜெயந்தி விழா இன்று (ஜன.3) நடைபெற்றது. இதையொட்டி, நேற்றைய முன்தினம் (ஜன.1) மூலமந்திர ஹோமம், நேற்று ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று (ஜன.3) கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், சர்வ மங்கள நாராயணி ஹோமம், பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாராயணி பக்தசபா பக்தர்கள் வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக நிகழ்ச்சி திடலுக்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

முன்னாள் குடியரசுத் தலைவரின் உரை: இந்த விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது, “ஸ்ரீபுரம் புண்ணிய பூமிக்கு நான் ஏற்கனவே பீகார் மாநில ஆளுநராக இருந்தபோது ஒருமுறையும், குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒருமுறை என இரண்டு முறை வந்துள்ளேன். அப்போதே சக்தி அம்மாவின் ஆன்மிக உரையைக் கேட்டு கவரப்பட்டேன்.

இந்த உலகத்தை அவர் தாயாக பாவிக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் ஏழ்மையை ஒழிக்க சக்தி அம்மா பாடுபட்டு வருகிறார். கல்வி, சுற்றுச்சூழல் என பல்வேறு வழிகளில் அவரது கருணை பார்வை விரிந்துள்ளது. மற்றவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று எப்போதும் கூறுவார்.

கல்வி உதவித்தொகை வழங்கும் 'வித்யா நேத்ரம் திட்டம்' என்னும் ஆரோக்கியா திட்டம் மூலம் உடல் பரிசோதனை ஆகியவை செய்து வருகிறார். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சித்த மருத்துவ சிகிச்சைகளையும் தொடங்கியுள்ளார். எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார். உலகிலேயே பெரிய இந்து தங்கக்கோயிலை எழுப்பியுள்ளார்" என்றார்.

ஜார்கண்ட் ஆளுநரின் உரை: தொடர்ந்து பேசிய ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதன் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும் என்று சக்தி அம்மா கூறுவார். அதன்படியே, ஏழை மக்களின் தேவைகளை சரிசெய்யாமல், ஒருவரால் மேன்மை அடைய முடியாது. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது சக்தி அம்மாவை காண வந்துள்ளார். அப்போது சக்திஅம்மா செய்த நற்செயல்களை கேட்டறிந்துவிட்டு, அவர் அரசு செய்யும் சேவைகளை சக்தி அம்மா செய்து வருகிறார் என கூறினார்.

மேலும், ஆன்மிக குரு ஒருவரால் இவ்வளவு சேவைகளை எவ்வாறு செய்ய முடியும் என்று என்னிடம் கேட்டு வியந்தார். ஒருவரால் இவ்வளவு சமுதாய நன்மைகளை செய்ய முடியும் என்று சொன்னால், ஒரு நாட்டின் தலைவராக இருப்பவர்கள் ஏன் செய்ய முடியாது என்ற கேள்வியையும் என்னிடத்தில் தெரிவித்தார். அவர் நாட்டின் பிரதமராக வருவதற்கு, இந்த மண்ணில் தோன்றிய உணர்வுதான் காரணமாக அமைந்திருக்கும் என கருதுகிறேன்” என்றார்.

இந்த விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தேரி யோகானந்த சுவாமிகள், காஞ்சிபுரம் பரமாந்தசுவாமிகள், நாராயணி பீடம் தங்கக்கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி, அறங்காவலர் சௌந்திரராஜன், மேலாளர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலில் வைக்க தேர்வான கர்நாடக சிற்பி செதுக்கிய ராமர் சிலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.