வேலூர்: குடியாத்தம் அடுத்து தமிழ்நாடு-ஆந்திர எல்லையான மோர்தனா கிராமத்தில் கவுண்டயா ஆற்றின் குறுக்கே மோர்தானா தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இது 11.50 மீட்டர் உயரத்தில், அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மோர்தானா அணை தற்போது தனது முழு கொள்ளளவான 11.50 மீட்டரை அடைந்து உபரிநீர் கண்டன்யா ஆற்றின் வழியாக வெளியேறி வருகிறது. ஆந்திராவை நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட மோர்தான அணை, ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது.
தற்போது 80 கன அடியாக வந்துகொண்டிருக்கும் நீரின் அளவு 350 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேலுர் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியாத்தம் நகருக்குள் பாயும் கண்டன்யா மகாநதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வருவாய் துறையினர் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இலங்கையை சேர்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை ; உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து...