வேலூர் மாவட்டம் அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2014ஆம் ஆண்டு முதல் நிலுவைத்தொகை, ஊக்கத்தொகை, எஃப்.ஆர்.பி. எனப்படும் மத்திய அரசின் பங்குத் தொகை என மொத்தமாக 32 கோடி ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையிலிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனை வழங்கக்கோரி விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லாததால் ஆத்திரமடைந்த கரும்பு விவசாயிகள் கடந்த 10ஆம் தேதி முதல் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் 5ஆம் நாளான இன்று, கரும்பு ஆலைக்கு முன்பாக விவசாயிகள் மேல் சட்டையில்லாமல் நிலுவைத் தொகையைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.