ETV Bharat / state

திரையரங்குகளில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மக்களிடம் ஒப்படைப்பு

வேலூர்: ராணிப்பேட்டையில் திரையரங்குகளில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பொதுமக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை
author img

By

Published : Aug 12, 2019, 11:15 AM IST

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட ஆறு திரையரங்குகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கப்பட்டதை கண்டறிந்த அலுவலர்கள், அனைத்து திரையரங்குகளிலும் திடீர் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்த திரையரங்குகளில், கைப்பற்றிய தொகையை திரைப்படம் பார்த்த மக்களுக்கு திருப்பித் தருவதற்கான ஏற்பாடுகளையும் அலுவலர்கள் செய்தனர். இவர்கள் நடத்திய ஆய்வில் மொத்தமாக அனைத்து திரையரங்குகளிலும் ரூபாய் 34 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

ஏசி வசதியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் திரைப்படக் கட்டணம் ரூபாய் 120, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் திரைப்படக் கட்டணம் ரூபாய் 100, ஊராட்சிப் பகுதிகளில் ரூபாய் 75 மட்டுமே அரசு நிர்ணயித்துள்ளது. இந்த கட்டண விதியை மீறிய திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக வசூல் செய்யக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வில் ராணிப்பேட்டை ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், வாலாஜா வட்டாட்சியர் பூமா, ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா, நெமிலி வட்டாட்சியர் சதீஷ், அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார், ஆகியோர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.

Intro:வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அதிகாரிகள் அதிரடி

திரையரங்குகளில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட 34000 பணம் பொதுமக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதுBody:வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, இராணிப்பேட்டை கோட்டத்தில் ஆறு திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்த திரையரங்குகளில் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகையை திரைப்படம் பார்த்த மக்களுக்கு திருப்பித் தர ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தமாக அனைத்து திரையரங்குகளிலும் ரூபாய்.34,400/- பொதுமக்களுக்கு திருப்பித் கொடுக்கப்பட்டது. ஏசி வசதியுள்ள, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூபாய்.120/- மாநகராட்சி, நகராட்சிப், பேரூராட்சி பகுதிகளில் பகுதிகளில் தியேட்டர்களில் ரூபாய். 100/- , ஊராட்சிப் பகுதிகளில் ரூபாய். 75/- மட்டுமே, வரிகள் தவிர்த்து, அதிகபட்சமாக டிக்கெட் வசூல் செய்ய அரசு அனுமதித்துள்ளது. இதனை மீறிய தியேட்டர்களுக்கு இனிமேல் அரசு நிர்ணயித்த தொகை கூடுதலாக டிக்கட் வசூல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், வாலாஜா வட்டாட்சியர் திருமதி. பூமா, ஆற்காடு வட்டாட்சியர் திருமதி.வத்சலா, நெமிலி வட்டாட்சியர் திரு.சதீஷ், அரக்கோணம் வட்டாட்சியர் திரு.ஜெயக்குமார், ஆகியோர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.