ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை!

வேலூர்: ஈடிவி பாரத் செய்தியின் அடிப்படையில், வேலூரில் இரண்டு டன் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்டது.

author img

By

Published : Dec 6, 2019, 3:50 PM IST

ETV Bharat News Echo: vellore District Collector in Action!
ETV Bharat News Echo: vellore District Collector in Action!

வேலூர் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுவினர் காகிதக் கவர்கள், காட்டன் துணிப்பைகள், வாழை இலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வது குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு சிறப்பு செய்தி தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் நாம் பேசும்போது, ஆரம்பத்தில் நெகிழிக்கு மாற்றாக காகிதக் கவர்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததாகவும், நாளடைவில் மீண்டும் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பதால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குடோனில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள்
குடோனில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள்

இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம்சுந்தரத்திடம் கேட்டபோது, ”வேலூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இருப்பினும், அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டுவந்து குடோனில் பதுக்கிவைத்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்

இந்நிலையில், நாம் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு நேற்று வேலூர் மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் தொடர்பாக திடீர் ஆய்வு நடத்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில், வேலூர் கேஎம் செட்டி தெருவில் குடோனில் பதுக்கிவைத்திருந்த தடைசெய்யப்பட்ட இரண்டு டன் நெகிழியை பறிமுதல் செய்தது. பின்னர், குடோனுக்கு மாநகராட்சி, வருவாய் அலுவலர்கள் சீல் வைத்தனர். இனியும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வேலூர் மகளிர் குழுவினரின் நெகிழி ஒழிப்பு புரட்சி! - சிறப்புக் கட்டுரை

Intro:வேலூர் மாவட்டம்

ஈடிவி பாரத் வழங்கிய தகவல் எதிரொலி - வேலூரில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான நெகிழி பொருட்கள் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நடவடிக்கைBody:வேலூர் மாவட்டத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுவினர் காகிதக் கவர்கள் காட்டன் துணி பைகள் வாழை இலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து தயார் செய்வது குறித்து ஈடிவி பாரத் நிறுவனம் சிறப்பு தொகுப்பு ஒன்றை தயாரித்துள்ளது அப்போது மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பேசும்போது ஆரம்பத்தில் நெகிழிக்கு மாற்றாக காகிதக் கவர்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததாகவும் நாளடைவில் மீண்டும் நெகிழி பயன்பாடு அதிகரிப்பதால் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்தனர் இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம்சுந்தரத்திடம் கேட்டபோது, வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் உற்பத்தி கிடையாது இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்துள்ளனர் இது தொடர்பாக ஏற்கனவே ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளோம் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து நெகிழி பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் இந்த சூழ்நிலையில் ஈடிவி வழங்கிய தகவலை வைத்து இன்று வேலூர் மாவட்டத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை தொடர்பாக திடீர் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் அதனடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், வேலூர் கேஎம் செட்டி தெருவில் குடோனில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 2 டன் நெகிழியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு ரூ 3 லட்சம் ஆகும் அதை தொடர்ந்து அந்த குடோனுக்கு மாநகராட்சி மற்றும் வருவாய் அதிகாரிகள் சீல் வைத்தனர் மேலும் தடைசெய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்துவது தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.