ETV Bharat / state

திருமணம் முடிந்தது... மண்டபத்தைப் பூட்டிய தேர்தல் அலுவலர்!

வேலூர்: திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற திருமண மண்டபத்திற்கு திருமணத்திற்காக வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததையடுத்து அம்மண்டபத்திற்கு அலுவலர்கள் மீண்டும் பூட்டு போட்டனர்.

lock
author img

By

Published : Aug 5, 2019, 6:20 AM IST

Updated : Aug 5, 2019, 8:01 AM IST

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்பூர் பஜார் பகுதியில் வாக்கு சேகரிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்டாலின் அங்கிருந்த தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இஸ்லாமிய நிர்வாகிகளுடன் சந்திப்பில் ஈடுப்பட்டார்.

இதனையடுத்து தேர்தல் விதிமுறையை மீறியதாக ஸ்டாலின் மீதும், திருமண மண்டப உரிமையாளர், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீதும் தேர்தல் விதிமுறையை மீறியதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் அத்திருமண மண்டபத்தை வட்டாச்சியர் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்தனர். ஆனால் அந்த மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்ததால், அதற்கு மட்டும் அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

திருமண மண்டபத்தை பூட்டும் அலுவலர்

அதன்பேரில், மண்டபத்தை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில், திருமணம் நிறைவடைந்ததையடுத்து, அம்மண்டபத்திற்கு தேர்தல் அலுவலர்கள் மீண்டும் பூட்டு போட்டனர்.

Intro:
ஆம்பூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற திருமண மண்டபத்திற்கு திருமணத்திற்காக வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததையெட்டி மீண்டும் அம்மண்டபத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து 01.08.2019 அன்று காலை ஆம்பூர் பஜார் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்த ஸ்டாலின் அவ்வழியாக இருந்த தனியார் காலணி தொழிற்சாலைக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இஸ்லாமிய நிர்வாகிகளுடன் சந்திப்பில் ஈடுப்பட்டார்.

இதனை தொடர்ந்து தேர்தல் விதிமுறையை மீறி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டதாக அவர் மீதும் மண்டப உரிமையாளர் , வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தேர்தல் விதிமுறையை மீறியதற்காக 171F 171C 188IPC ஆகிய பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு அத்திருமண மண்டபத்திற்கு வட்டாச்சியர் சுஜாதா தலைமையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனை தொடர்ந்து அம்மண்டபத்தில் நாளை நடைபெற இருப்பதால் திருமண வீட்டார் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று மாலை 6.45 மணிக்கு மண்டபம் திறக்கப்பட்டு இன்று மாலை 6.45 வரை திருமண ஏற்பாடுகள் நடத்த அனுமதித்து மண்டபத்தை திறக்க உத்தரவிட்டார்.

அதன்படி இன்று அம்மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நிறைவேறின.

பின்னர் காலக்கெடு முடிவடைந்ததையெட்டி மீண்டும் அம்மண்டபத்திற்கு தேர்தல் அதிகாரி சுதா தலைமையில் மீண்டும் பூட்டு போடப்பட்டது.

Conclusion: இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வழக்கு முடிந்த பின்னர் இம்மண்டபம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated : Aug 5, 2019, 8:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.