வேலூர்: திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான துரைமுருகன் (82) உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜன. 16) காலை 6.00 மணிக்கு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வாயு தொல்லை காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவருக்கு மருத்துவமனை "A" பிளாக்கில் வைத்து, எக்கோ (ECHO), சர்க்கரை, இரத்த அழுத்தம், ஈசிஜி மற்றும் இரத்த பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டன.
மருத்துவமனையில் துரைமுருகனுடன் அவரது மகனும் வேலூர் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த் உடன் இருந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த துரைமுருகனின் உடல்நிலை சீராக இருந்ததால் 7 மணி நேர சிகிச்சைக்கு பிறகு மதியம் 1 மணி அளவில், காட்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். தொடர்ந்து அவரது உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் அனுமதி!