திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரி மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் துரைமுருகன் கடும் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருமானவரித்துறை சோதனை குறித்து இன்று துரைமுருகன் செய்தியாளர்களுக்குபேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "வருமானவரித்துறை சோதனை பற்றி எனக்கு எதுவும் கவலை கிடையாது. அவர்கள் எங்களிடம் விதி மீறி எதுவும் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் வந்தார்கள், சென்றார்கள். என்னை போல் பிற திமுக பிரமுகர்கள் வீடுகளிலும் சோதனை செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். எனவே திமுகவை குறிவைத்து செய்யும் வேலைதான் இது. இதில் முழுக்க முழுக்க அரசியல் தலையீடு உள்ளது" என்றார்