வேலூர் மாவட்டம், ஆம்பூர் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அமமுக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான பாலசுப்ரமணியின் தந்தை ராதாகிருஷ்ணன் நேற்று காலமானார். அவரது உடலுக்கு அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆம்பூர் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பாலசுப்ரமணியனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த டிடிவி தினகரன், சிறிது நேரம் அங்கிருந்து விட்டுப் பின்னர் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துவிடும்! - டிடிவி சூசகம்