வேலூர்: காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வருபவர், ஒட்டந்தாங்கள் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன். இவர் நேற்று (மே 08) வேலை பார்க்கும் கடைக்குச் சென்று பார்த்தபோது கடையின் முன் அமர்ந்து 5 இளைஞர்கள் மது அருந்திக்கொண்டு இருந்தனர்.
இதனை கோவிந்தன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறிய நிலையில் அந்த போதை கும்பலைச்சேர்ந்த ஐந்து பேர், கோவிந்தனை சராமரியாக தாக்கினர். இதில் கோவிந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட கோவிந்தன் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மேலும், இச்சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு போதைக் கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இனி காமெடிதான், கடிதம் அனுப்பாதீங்க- திருச்சி சாதனா உருக்கம்!