வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு லால் மஜித் பகுதியைச் சேர்ந்தவர் அஜீஷ் (38). இவர் நேற்று (பிப். 9) குடித்துவிட்டு தனது காரில் பேர்ணாம்பட்டிலிருந்து மாத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் சிறுவனுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் காரை துரத்திப் பிடித்து காரையும் ஓட்டுநர் அஜீஸையும் பிடித்து பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வாகனத்தைச் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் ஒரு ஏர்கன், போலி செய்தியாளர் அடையாள அட்டை, வெவ்வேறு மாவட்ட ஆர்டிஒ எண்ணுடன் கூடிய நான்கு வாகன பதிவெண் பிளேட்டுகள், ஒரு பெரிய பட்டாகத்தி, 3 கத்தி, ஒரு பாஜக கொடி இருப்பது தெரியவந்தது.
![Vellore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-06a-suspicious-man-secured-image-7209364_09022021223023_0902f_1612890023_142.jpg)
இது குறித்து காவல் துறையினர் அஜீஸிடம் விசாரணை மேற்கொண்டபோது சினிமா படப்பிடிப்பிற்காக இதுபோன்ற பொருள்கள் வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் விடுதியில் காதல் ஜோடி தற்கொலை: போலீஸார் விசாரணை!