திமுகவின் இணைய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில், வேலூர் மாவட்டம் சேண்பாக்கத்தில் இணையதளம் மூலம் திமுகவில் உறுப்பினர்களானவர்களுக்கு உறுப்பினர் அட்டையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (அக். 26) வழங்கினார்.
அப்போது, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்காவிட்டாலும் பாதிப்பு இல்லை என பாஜக கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த துரைமுருகன், "பாஜகவிற்கு எதில் தான் பாதிப்பு இல்லை. கரோனாவால் கூட பாதிப்பு இல்லை என்றுதான் கூறுகின்றனர்” என்றார்.
மேலும், ஆதார் அட்டையில் இருந்த தமிழ் வாசகம் நீக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, "இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும். தற்போதுவரை திமுக கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க...ஓ.பி.சிக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு வஞ்சகப்போக்கு - வைகோ தாக்கு!