ETV Bharat / state

நாங்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறோம்... ஸ்டாலினால்தான் அது முடியும்! - பொறுப்புடன் பேசிய துரைமுருகன்

வேலூர்: 'அதிமுக அரசு தற்போது 4.50 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. இவ்வளவு கடனை நாங்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின்தான் அதைச் சமாளிப்பார்' என்று தமிழ்நாட்டின் கடன் குறித்து துரைமுருகன் பொறுப்பான பதிலளித்தார்.

dmk duraimurugan
dmk duraimurugan
author img

By

Published : Feb 24, 2020, 6:17 PM IST

வேலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். கூட்டத்தில் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் போராடுவதால் தமிழ்நாட்டில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடும்பொழுது அமைதியாகத்தான் செல்கிறது" என்று கூறினார்.

மேலும், ஏழு தமிழர்கள் விடுதலைத் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் ஜீரோவுக்கு சமமானது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறித்து கேள்விக்கு, தீர்மானத்தை மட்டும் ஜீரோ என்று அவர்கள் சொல்லவில்லை தமிழ்நாடு அமைச்சரவையையும் ஜீரோ என்று சொன்னதற்கு அர்த்தம் என்று பதிலளித்தார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரைமுருகன்

தொடர்ந்து பேசிய அவர், "வார்டு சீரமைப்பு விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களைச் சந்தித்து முறையிடவுள்ளோம். நாங்கள் ஆட்சியிலிருந்து சென்றபோது ஒரு லட்சம் கோடி கடன் வைத்திருந்தோம். அப்போது எங்களைக் கடனாளியாகிவிட்டீர்கள் என்று அதிமுகவினர் கூறினர்.

அவர்கள் தற்போது 4.50 லட்சம் கோடி கடன் வைத்துள்ளார்கள். இவ்வளவு கடனை நாங்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின்தான் அதைச் சமாளிப்பார்" என்றார்.

இதையும் படிங்க: வீட்டை உடைத்து தரைமட்டமாக்கிய ஒற்றைக் காட்டு யானை: விவசாயி காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.