ETV Bharat / state

'ரஜினிகாந்த் குறித்து பேசுவது...' துரைமுருகன் தடாலடி பதில்! - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் முடிவு குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

வேலூர்
வேலூர்
author img

By

Published : Dec 29, 2020, 8:50 PM IST

வேலூர்: காட்பாடியில் உள்ள விண்ணம்பள்ளியில் நடைபெற்ற "அதிமுகவை நிராகரிப்போம்" பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, பெரியார், அம்பேத்கர், காந்தி போன்றவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் பிறப்பால் மனிதராக இருந்தாலும் குணத்தால் மிருகங்கள் என்றார்.

அரசியலில் பின்வாங்கிய ரஜினிகாந்த்

தொடர்ந்து, ரஜினிகாந்த் தான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தது குறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன், நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதும் தொடங்காததும் உடல் நிலை, மனநிலை, சூழ்நிலையை பொறுத்தது. அதில் நுழைந்து நாங்கள் எந்த கருத்துகளையும் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார்.

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

ரஜினி கட்சி தொடங்காதது யாருக்கு சாதகமாக அமையும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் குறித்து பேசுவது முடிந்து போன ஒன்று என்றார்.

இதையும் படிங்க:'என்னை மன்னியுங்கள்' - ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.