ETV Bharat / state

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: வேலூரில் புதிய பயனாளர்களுக்கு ரூ.1000 வழங்கிய ஆட்சியர்! - தமிழ்நாடு முதலமைச்சர்

Vellore Collector: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் மறுபரிசீலனை செய்துகொள்ள தமிழ்நாடு அரசு அவகாசம் விடுத்திருந்தது. இந்நிலையில், வேலூரில் இரண்டாம் கட்டமாக மறுபரிசீலனை செய்யப்பட்ட 14ஆயிரம் பயனாளர்களுக்கு உரிமைத்தொகையை குடியாத்தத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 10:56 PM IST

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளர்கள்

வேலூர்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டமானது, பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்த துவங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்த விண்ணப்பத்தில் மாதந்தோறும் ரூபாய் 1000 பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1கோடியே 6 லட்சத்து 49 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதியுடைய விண்ணப்பங்களாக அறிவித்தனர். பின்னர் முதல் கட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தாய்மார்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கியது. இதில் புதிதாக விண்ணப்பிக்க கூடிய பெண்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தது.

  • சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7.35 இலட்சம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து, 6 மகளிருக்கு வங்கி… pic.twitter.com/tLgrRj0vhN

    — CMOTamilNadu (@CMOTamilnadu) November 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ.10) நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7.35 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதலாக 6 மகளிருக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கும் பெண்களுக்கு வங்கி பற்று அட்டைகளையும் வழங்கினார். இதையடுத்து, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், மறுபரிசீலனை செய்யப்பட்ட பயனாளர்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், உரிமை தொகையினை வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 14 ஆயிரத்து 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் முதற்கட்டமாக, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் 2 ஆயிரத்து 500 பேருக்கு உரிமை தொகையினை வழங்கினார். ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில்
சுமார் 1 லட்சத்து 79 ஆயிரத்து 400 பேர் மகளிர் உரிமைத் தொகையினை பெற்று வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் இரண்டாம் கட்டத்தில் மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். முன்னதாக இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு முதலில் ஒரு ரூபாய் அனுப்பி சோதனை நடத்தப்பட்டது.

பின்னர் 1 ரூபாய் அனுப்பியவுடன் மகளிர் உரிமைத்தொகைக்காக அனுப்பப்பட்டது என்று பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பயனாளர்களின் வங்கிகணக்கிற்கு 1000 ரூபாய் வெற்றிகரமாக அனுப்பப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட மறுபரிசீலனையை முழுமையாக நிறைவுசெய்தது.

இதையும் படிங்க: "மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை" - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.