ETV Bharat / state

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனைவி நகைக்காக படுகொலை - டிஐஜி, எஸ்பி நேரில் ஆய்வு! - DIG investigate a case women killed for jewels at vellore katpady

வேலூர்: காட்பாடியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனைவி 4 சவரன் தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

women killed
படுகொலை
author img

By

Published : Jan 19, 2020, 12:14 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கண்ணையாவின் மனைவி சரோஜா அம்மாள் (70), கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார்.

இவர் கடந்த ஜனவரி 17ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து சரோஜா அம்மாள் தலையில் பலமாக தாக்கியது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சரோஜா அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வேலூர் சரக தலைமை ஆய்வாளர் காமினி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனைவி நகைக்காக படுகொலை

மேலும், மோப்ப நாய் வரவழைத்து கொலைக் குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக வேலூர் மாட்டத்தில் கடந்த ஆறு நாட்களில் நடைபெறும் 3ஆவது கொலை என்பதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரம்: மூவர் குண்டர் சட்டத்தில் கைது

Intro:Body:வேலூர் மாவட்டம்.

காட்பாடி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனைவி நகைக்காக படுகொலை. சம்பவ இடத்தில் DIG, SP விசாரணை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் (லேட்) கண்ணையா நாயுடு. கண்ணையன் இறந்த நிலையில் இவர் மனைவி சரோஜாஅம்மாள் (70) கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார். இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருக்கும்போது வீட்டின் மதில் சுவர் ஏறி குதித்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரோஜாஅம்பாளை தலையில் தாக்கி அவர் அணிந்து இருந்த 4 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திர்க்கு வந்த சம்பவ இடத்தில் வேலூர் சரக DIG காமினி, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். இக்கொலை தொடர்பாக
லத்தேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்
மோப்ப நாய் வரவைத்து கொலை குற்றவாளிகளை தேடிவருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் நடைபெறும் 3 வது கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது. அர்த்தமற்று நடைபெறும் கொலைகளால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.