திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடையராஜபாளையம் கிராமத்தில் தண்ணீர் தேடி புள்ளிமான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி நாய்கள் குரைத்தப்படி துரத்தியதில் மான் பயந்து அங்கிருந்த வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தது.
அப்பகுதி மக்கள் மானை உடனடியாகப் பிடித்து, ஆம்பூர் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அங்கு விரைந்தசென்ற வனத் துறையினர், பொதுமக்களிடமிருந்து மானை பிடித்துச்சென்று சான்றோர்குப்பம் காப்புக்காடு வனப்பகுதியில் விட்டனர்.