ETV Bharat / state

பேரணாம்பட்டு பகுதியில் பரபரப்பு:ஆடு மேய்க்கும் பெண் சடலமாக மீட்பு.. உறவினர்கள் சாலை மறியல்.. - வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர்

பேரணாம்பட்டு அருகே ஆடு மேய்க்கும் பெண்ணை மர்ம நபர்கள் நகைக்காக காது மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Roadblock
பேரணாம்பட்டு பகுதியில் சாலை மறியல்
author img

By

Published : Jul 7, 2023, 6:30 PM IST

வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியைச் சேர்ந்தவர், மோகன். இவரது மனைவி வளர்மதி. இத்தம்பதியருக்கு பாண்டியன் (25), அசோக்குமார் (23) என்ற 2 மகன்களும், அபிநயா (19) என்ற மகளும் உள்ளனர். வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.

நேற்று மதியம் 12 மணியளவில் ஆடுகளை அருகில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீட்டிற்குத் தேவையான விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வளர்மதி காதில் அணிந்திருந்த 1/2 சவரன் தங்கத்திற்காக, அவரது காதினை கத்தியால் அறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி அங்கிருந்து தப்பி ஓடினார். வளர்மதியை விரட்டிச் சென்ற மர்ம நபர்கள் அவரை மடக்கி கழுத்தை அறுத்து கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் வளர்மதி பிணமாக கிடந்தார். உடனடியாக இதுகுறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) இருதயராஜ் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளார் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் சுருதி, கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும், வேலூரில் இருந்து மோப்பநாய் 'சாரா' வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சாரா சம்பவ இடத்திலிருந்து சாத்கர் கிராமம் கீழ் ரோடு வழியாக, கானாற்றில் உள்ள கிணறு வரை 2 கிலோமீட்டர் தூரம் ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் தமிழ்மணி, தடயவியல் நிபுணர் சேதுராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்தனர். போலீசார் வளர்மதியின் பிணத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு- ஆம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பேரணாம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மன அழுத்தத்தால் தான் டிஐஜி தற்கொலை செய்துள்ளார் - ஏடிஜிபி அருண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.