வேலூர்: திருவலம் அருகே உள்ளிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (30). இவருடைய மனைவி லெட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது.
நேற்று (அக்.4) இரவு ஜெயபிரகாஷ், லெட்சுமி இருவரும் அவர்களுக்கு சொந்தமான பசு மாட்டை விஜயகுமாருக்கு (32) சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து வீட்டிற்கு ஓட்டி வந்தனர். வரும் வழியில் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழந்தனர். இதில், பசு மாடும் உயிரிழந்தது.
கணவன், மனைவி பலி
இது குறித்து தகவலறிந்த திருவலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பன்றிகளிடம் இருந்து விவசாய நிலத்தை பாதுகாக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விஜயகுமாரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி