வேலூர் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலருக்கு நேற்று (ஏப்ரல்.22) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரின் அலுவலகம் மூடப்பட்டது. இன்று (ஏப்ரல்.23) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அங்கு பணியாற்றும் சக பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அலுவலகத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதி மூடப்பட்டது.
வேலூர் மண்டித் தெருவில் உள்ள தனியார் வங்கி (கர்நாடகா வங்கி) ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கிருமி நாசினி தெளித்து வங்கியை மூட சுகாதாரத்துறை பணியாளர்கள் இன்று காலை நடவடிக்கை எடுத்தனர்.
இதையும் படிங்க:
பிரபல எண்ணெய் நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு: நிறுவனத்திற்கு சீல் வைத்த அலுவலர்கள்!