ETV Bharat / state

கரோனா தொற்று பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் - சிறப்பு மருத்துவ முகாம்

வேலூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

corona
corona
author img

By

Published : Apr 16, 2020, 1:54 PM IST

வேலூரில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட 16 பேர் வசிக்கும் பகுதியான ஆர்.என்.பாளையம், முள்ளிப்பாளையம், கஸ்பா, கருகம்புத்தூர், சைதாப்பேட்டை, சின்ன அல்லாபுரம் கொணவட்டம் ஆகிய பகுதிகளில் இம்மாத இறுதிவரை மருத்துவ முகாம் நடைப்பெறுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

சிறப்பு மருத்துவ முகாம்

இது குறித்து அவர் கூறுகையில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று முதல் (ஏப்.16) இம்மாத இறுதிவரை தினசரி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும். இந்த முகாமில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கட்டாயம் தங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டது. அதன்படி,

1) அரசு மேல்நிலைப் பள்ளி-கொணவட்டம்

2) மாநகராட்சி தொடக்கப்பள்ளி கஸ்பா

3) மாநகராட்சி நடுநிலைப்பள்ளி- சின்ன அல்லாபுரம்

4) முஸ்லீம் உயர்நிலை பள்ளி- ஆர்.என்.பாளையம்

5) கோடையிடி குப்புசாமி மேல்நிலைப் பள்ளி-சைதாப்பேட்டை

6) முஸ்லீம் தொடக்கப்பள்ளி- ஹாஜிபுரா கருகம்புத்தூர் ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.