வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது மாவட்டக் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 698 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 33 ஆயிரத்து 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 ஆயிரத்து 428 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக 446 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதையும் படிங்க : 'நாட்டில் அவரச நிலையை பிரகடனம் செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை