ETV Bharat / state

"எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் போ என்றால்.. சட்டமன்றம்.. பாராளுமன்றம் எதற்கு?" - சீமான் ஆவேசம்! - NTK Seeman

NTK Leader Seeman Interview : நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் நட்டின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை சாமானியனுக்கு வேண்டும் என தெரிவித்தார்.

வேலூரில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 7:24 PM IST

NTK Leader Seeman Interview

வேலூர்: வேலூரில் உள்ள பென்ஸ் பார்க் தனியார் ஹோட்டலில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறியாதவது, "இந்தியாவில் எந்த ஒரு சாமானியனுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை வந்தாலும் நீதிமன்றம் போ, நீதிமன்றம் போ என்று கூறுகின்றனர்.

இப்படி கூறுவதற்கான காரணம் என்ன. பின்னர் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் பல்லாங்குழி ஆடுவதற்காகவா இருக்கிறது. கேரள மீனவர்கள் எல்லைத் தாண்டி தமிழ்நாடு எல்லைக்குள் வருகிறார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் உதயநிதியை, ஸ்டாலின் பாராட்டி பேசி வருகிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழர்தான். அவர் கர்நாடகாவுக்கு சென்றால் தன்னை ஒரு கன்னடர் என்று சொல்லிக் கொள்கிறார். ஏன் இந்த நிலை என்று தெரியவில்லை. இப்படி பேசி வருவதற்கு, பாஜக-வில் தமிழ்நாட்டிற்கு மாற்றாக கர்நாடகத்திற்கு மாநில தலைவராக பொறுப்பேற்று இருக்கலாம்.

நான் உலகின் எந்த ஒரு ஓரத்திற்கு சென்றாலும் தமிழன் என்று சொல்லி வருகிறேன். கர்நாடகா காவிரியில் தண்ணீர் விட மறுக்கிறது. தமிழ்நாட்டை மத்திய அரசு பாலைவனமாக மாற்றிவிட்டது. நாட்டுக்காக காமராஜர் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். மத்திய அரசு வரி விதிப்பை மக்கள் மீது தொடர்ந்து திணித்து வருகிறது.

எதற்கு வரி பிரிட்டிஷ்காரன் காலத்தில் இருந்தே வரி என்பது கிடையாது. ஆனால் தற்போது நம்மை நாமே ஆளும் காலத்தில், வரி நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றது. எதற்கெடுத்தாலும் வரி, நாட்டில் லஞ்சம், ஊழல் ஒழிந்ததா? என்றால் இல்லை. ஆயிரம் கொடுத்து வெற்றி பெறுவது ஏன்?. இவ்வாறு செய்தால் எப்படி லஞ்சம், ஊழல் ஒழியும்.

மாநாடு என்றுக் கூறி 13 ஆயிரம் குடிசைகளை அகற்றி, அவர்களை லாரியில் கொண்டு சென்று தெருவில் இறக்கி விட்டது தான் தற்போது நடந்த பெரும் சாதனை என்று சொல்லலாம். மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. நாட்டில் 80 கோடி ஏழை மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு எதுவும் செய்வது கிடையாது. ஒரு திட்டம் ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவது கிடையாது.

பாரத நாடு, பைந்தமிழர் நாடு என்று பேச்சு மட்டும் தீவிரப்படுத்தப்படுகின்றது. நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதாவது புரட்சி ஏற்பட வேண்டும். நாட்டின் முதல் குடிமகனை தேர்வு செய்யும் அதிகாரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கேற்ப, இதை மாற்ற வேண்டும். ஒரு வார்டு கவுன்சிலருக்கு ஓட்டு போடும் உரிமை பெற்றவன், இந்திய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஓட்டு போட வாய்ப்பு கிடையாது.

மருத்துவம், கல்வி தனியார் மையமாகிவிட்டது. இந்திய அரசுக்கு சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது. யாராவது வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டால், அவர்களை தாய்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது, நாட்டின் கடமை. தற்போது அந்த நிலையே மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது.

நீங்கள் வாழ, பிறரை அழிக்கிறீர்கள். காடுகளை அழித்து நாடுகளை உருவாக்குகிறீர்கள். இருக்கும் மலை, மரங்கள் அழிக்கப்படுகின்றன. பிறகு 4000 கோடி ரூபாய் செலவு செய்து, தூய காற்று ஏற்பாடு செய்யப்படுகிறது என்று சொல்கிறீர்கள், இதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமா?. ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும்.

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நல்லாட்சி தந்தார். இதை அனைவரும் மறக்க மாட்டோம். சுழற்சி முறையில் நாட்டை ஆளுகிறோம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி வரவேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி திட்டம் கொண்டு வரப்பட்டு வருடங்களே அதிகரிக்கின்றது. ஆனால் அந்தத் திட்டம் இந்நாள் வரை நிறைவேற்றப்படவில்லை. ஒரே ஒரு செங்கல்லை வைத்து விட்டு சென்று விட்டனர்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்போவதாக கூறுகின்றனர். பின்னர் அதுவே நாளடைவில் பயணிகள் இல்லை என்று சொல்லி நிறுத்தி விடுவார்கள். ஜெயிலர் படத்துக்கு இல்லாத சட்டதிட்டங்களை லியோ படத்துக்கு ஏன் திணிக்கிறீர்கள். நாட்டில் உள்ள குறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்" என்று சீமான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகம் வந்த சோனியா காந்தியின் அரசியல் திட்டம் என்ன? - காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் முக்கிய ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.