ETV Bharat / state

மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்கள் பாகுபாடு பார்க்காதிங்க..! - அமெரிக்கை நாராயணன் - bjp

வேலூர்: "மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்கள் பாகுபாடு பார்க்காமல், அனைத்து மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்" என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா நாராயணன்
author img

By

Published : Apr 23, 2019, 10:38 PM IST

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள தலைவர்கள் பாகுபாடு பார்க்காமல் அனைத்து மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். எங்கள் கட்சித் தலைவர் அழகிரி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை வரவேற்கிறேன். அதேசமயம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிற மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறவில்லை என பொய் சொல்லியுள்ளார். ஆனால் ஐந்து ஆண்டுகளில் இதுவரை எட்டு முறை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் பல பேர் உயிரிழந்துள்ளனர்", என்றார்.

மதசார்பற்ற கூட்டணி தலைவர்கள் அனைத்து மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலூரில் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கா நாராயணன் இன்று வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளரை சிரித்தார் அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தொடர்பான மாணவர் சேர்க்கை தமிழகத்தில் இன்று தொடங்கியுள்ளது ஆனால் அதிமுக அரசு இதில் கவனம் செலுத்தாததால் பல இடங்களில் இணையதள சேவை முடங்கியுள்ளது ஏழை மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர் இதேபோல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே தற்போது இந்த திட்டத்தில் சேர்க்கை வழங்கப்படுகிறது ஆனால் மத்திய அரசு விதிப்படி சிபிஎஸ்சி பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள தலைவர்கள் பாகுபாடு பார்க்காமல் அனைத்து மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எங்கள் கட்சித் தலைவர் அழகிரி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதை வரவேற்கிறேன் அதேசமயம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிற மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறவில்லை என பொய் சொல்லி உள்ளார் ஆனால் ஐந்து ஆண்டுகளில் இதுவரை எட்டு முறை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது இதில் பல பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.