கரோனா ஊரடங்கின் போது கலை -அறிவியல் கல்லூரி மாணவர்கள் தாங்கள் வைத்திருக்கும் அரியருக்கான அரியர் தேர்வு கட்டணம் செலுத்தினால் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் அரியர் தேர்வினை எழுத வேண்டும் என்றும், அதற்கான தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கூறியிருந்தது. இதனையடுத்து வேலூர் ஊரீசு கலை - அறிவியல் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "ஏற்கெனவே அரியர் தேர்வுக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்ட நிலையில், மீண்டும் நாங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல்நிலைய காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசின் அறிவிப்பை எதிர்த்து பல்கலைக்கழக மாணியக்குழு (UGC) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அரியர் தேர்வை விரைவாக நடத்தி முடிக்க அனைத்து பல்கலைக்கழகங்களும் ஏற்பாடுகளை செய்துவருகின்றன.
இதையும் படிங்க: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி புதிய கட்டண விவரம்!