வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம். மாற்றுத்திறனாளியான இவர், தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலக தடகளப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். ஆனால் போட்டியில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்று வர தன்னிடம் போதிய பணவசதி இல்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் உதவிகேட்டு வெங்கடாச்சலம் முறையிட்டார்.
இதையடுத்து அவருக்கு உதவ மாவட்ட ஆட்சியர் முன்வந்தார். அதன்படி தற்போது தாய்லாந்தில் நடைபெறும் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக வெங்கடாச்சலத்துக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கி மாவட்ட ஆட்சியர் நிதியுதவி அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயலுக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்துவருகிறது.
இதையும் படிங்க:வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக, அதிமுக கைகலப்பு!