வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் இருப்பு குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து வணிகர் சங்கங்கள், காய்கறி விற்பனை, கூட்டுறவு சங்கம், அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒருசிலர் அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பதாக எழுப்பிய குற்றச்சாட்டினால் அத்தியாவசிய பொருள்களுக்கு மாவட்டம் முழுவதும் சீரான விலை நிர்ணயம் செய்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும் 6 வகை பழங்கள் அடங்கிய தொகுப்பு விற்பனைத் தொடக்கம்!