ETV Bharat / state

வேலூரின் 38 ஊராட்சிகளில் மேற்கொண்ட திட்டங்கள்: 7 பக்க அறிக்கை வெளியீடு! - 38 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்

வேலூர்: மாவட்டத்தின் 38 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த ஏழு பக்க அறிக்கையை வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ளார்.

press meet
press meet
author img

By

Published : Jun 9, 2020, 10:53 AM IST

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குள்பட்ட 38 ஊராட்சிகளில் கரோனா காலகட்டத்தில் குடிநீர் உள்பட அத்தியாவசிய பணிகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறி நேற்று (ஜூன் 8) காலை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

144 தடைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் போராட்டம் எதிரொலியாக அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள்பட்ட 38 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஏழு பக்க அறிக்கையை ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.

அதில், "2016-17ஆம் ஆண்டுமுதல் 2019-2020ஆம் ஆண்டு முடிய பல்வேறு திட்டங்களின்கீழ் குடிநீர், அத்தியாவசியத்திற்கென 6,462 பணிகள் 86.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்துமுடிக்கப்பட்டுள்ளது.

இதில் குடிநீருக்காக மட்டும் 199 பணிகள் 6.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்துமுடிக்கப்பட்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் வெளிமாநிலங்களிலிருந்து ஊர் திரும்பியவர்களில் அதிகமானோர் அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்தவர்கள்தான்.

அவர்கள் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின்கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது" குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மின்சக்தித் துறையில் இந்தியா- டென்மார்க் ஒப்பந்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.