ETV Bharat / state

மாணவியின் கனவை ஊக்குவிக்க தனது இருக்கையில் அமர வைத்த கலெக்டர்! - Childrens Day

வேலூரில் அரசுப்பள்ளி மாணவியின் ஐஏஎஸ் கனவை ஊக்குவிக்கும் வகையில் தனது இருக்கையில் அமர வைத்து ஊக்குவித்த மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் கனவை நிறைவேற்ற தனது இருக்கையில் அமர வைத்த ஆட்சியர்

author img

By

Published : Nov 14, 2022, 8:40 PM IST

வேலூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது மாணவர், மாணவிகளிடம் உங்களது கனவு குறித்து சொல்லுங்கள் என மாவட்ட ஆட்சியர் கேட்க, அதற்கு சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி துர்கா லட்சுமி ஐஏஎஸ் ஆக வேண்டும் எனத் தெரிவித்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாணவி துர்கா லட்சுமியை தனது இருக்கையில் அமர வைத்து 'உன்னுடைய கனவு நினைவாகட்டும்' என்று கூறி வாழ்த்து தெரிவித்து, மாணவ, மாணவிகள் 'அனைவரையும் நன்றாகப் படிக்கவேண்டும்' என்று கூறி ஊக்குவித்து மகிழ்ச்சி அடையச்செய்தார்.மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் மாணவர்களையும், அங்கிருந்தவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மாணவியின் கனவை ஊக்குவிக்க தனது இருக்கையில் அமர வைத்த கலெக்டர்!

இது குறித்து அந்த மாணவி கூறுகையில், 'என் தந்தை எங்களை விட்டுப்பிரிந்து சென்றுவிட்டார். என்னுடைய அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வீட்டு வேலைக்குச்சென்று என்னை படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். எங்கள் குடும்பம் வறுமையில் இருந்து வரும் நிலையில், நான் IAS கனவோடு படித்து வருகிறேன். நிச்சயமாக IAS தேர்வில் தேர்வாகி மக்களுக்கு சேவையாற்றுவேன்.

நான் என்னுடைய அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன். என்னுடைய ஆசையைத் தெரிந்து கொண்டு, என்னை ஆட்சியரின் இருக்கையில் அமர வைத்து, என்னை மகிழ்ச்சி அடைய செய்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி' என்று மாணவி துர்கா லட்சுமி கூறினார்.

இதையும் படிங்க: பொய் செய்தி பரப்பும் முதலமைச்சர்: இபிஎஸ் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.