உலகம் முழுவதும குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை எற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராமன், அலுவலர்கள், மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த அவர், இறுதியாக குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு வாகனத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதையடுத்து, வேலூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் ராமன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.