ETV Bharat / state

'படிக்கும் வயதில் திரைப்படங்கள் பார்த்து கெட்டுப்போகாதீர்கள்' - வேலூர் கலெக்டர் - child awarness programme in vellore

வேலூர்: படிக்கும் வயதில் திரைப்படங்களைப் பார்த்து குழந்தைகள் கெட்டுப்போக வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

child-awarness-programme-in-vellore
child awarness programme in vellore
author img

By

Published : Feb 27, 2020, 8:44 AM IST

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மாவட்ட ஆட்சியர், 'முன்பெல்லாம் நம் முன்னோர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். பெண்கள்தான் வீட்டில் அனைவரையும் விசாரிப்பார்கள்.

ஆனால், தற்போதைய நவீனக் காலத்தில் தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்குச் சரியான அன்பு, அரவணைப்பு கிடைப்பதில்லை. எனவே அன்பு செலுத்துபவர்களைத் தேடி குழந்தைகள் செல்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அறிவுரை

நாட்டில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய 5 மாநிலங்களில்தான் 50% குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. குழந்தைகள் படிக்கும் வயதில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் மூழ்கி விடுகிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை சீரழிகிறது. எனவே, படிக்கும் வயதில் குழந்தைகள் திரைப்படத்தைப் பார்த்து கெட்டுப்போக வேண்டாம்'' என்றார்.

இதையும் படிங்க: பள்ளிப் படிப்புக்குப் பின்னர் என்ன படிக்கலாம்? - மாணவர்களுக்கு வழிகாட்டிய மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.