வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் பேசுகையில்,
தமிழக மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துக்கூறி உங்களுடைய பிரச்சனையை தீர்க்க, திமுக வேட்பாளரை அங்கு அனுப்ப வேண்டும்.
இன்றைக்கு இருக்கும் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு அநீதி இழைக்கின்ற வகையில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை எதிர்க்காத, அரசாக இருக்கிறது.
ஆனால் புதிவையில் நாங்கள் அதை எதிர்க்கின்றோம்
உதாரணமாக, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அது எங்களுடைய விவசாய நிலத்தை அழிக்கும் என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினோம்.
நீங்கள் ராணுவத்தை கொண்டு வந்தாலும் புதுச்சேரி மக்கள் அதை ஏற்கமாட்டார்கள் என்று கூறினோம்..
ஆனால் உங்களால் அதை சொல்லமுடியுமா?. தமிழக முதலமைச்சர் அதை சொல்வாரா ?.
ஆட்சி என்பது இரண்டாவது பட்சம் மக்கள் நலன் எங்களுக்கு முதன்மை என்பதை நிரூபித்து காட்டிருக்கிறோம்.
மேலும் கல்தோன்றா மண்தோன்றா காலத்தில் தோன்றிய மொழி தமிழ். நம் தமிழ் மக்கள் இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தி தீக்குளித்தவர்கள்,
இருமொழி கொள்கையை மட்டும் தான் அன்றைய பிரதமர் நேரு கொண்டு வந்தார். ஆனால் அதை மறந்து தனக்கு தெரிந்த மொழியாகியா இந்தியை கொண்டுவர திட்டம் தீட்டுகிறார் பிரதமர் மோடி.
கைகட்டி பாஜகவிற்கு வேலை செய்யும் உறுப்பினர் வேண்டுமா அல்லது மார்த்தட்டி உரிமைகளை கேட்கும் உறுப்பினர் வேண்டுமா என்பதை நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.