ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு!! - policeman wife

வேலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் குடும்பத்தோடு சென்ற தனிப்பிரிவு காவலர் மனைவியின் செயினை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருவர் காயம் அடைந்தனர்.

வேலூரில் தனிப்பிரிவு காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு!!

author img

By

Published : Jun 13, 2022, 12:06 PM IST

வேலூர்: பள்ளிகொண்டா காவல் வட்டத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றுபவர் தட்சிணாமூர்த்தி. நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பொய்கை அருகே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் திடீரென தனிப்பிரிவு காவலரின் மனைவி அமுதா கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.

இதில் நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்ததில் தனிப்பிரிவு காவலரின் மனைவிக்கு கால் முறிவும், மகளுக்கு கண்ணில் பலத்த காயமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் இருவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் காவலரிடமே செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வேலூரில் 15 சவரன் நகை, ரூ.70,000 ரொக்கம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.