வேலூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், ராஜேஸ்வரி, பிரேம், ராஜேந்திரன், மதன், லீலாவதி, கபாலி ஆகிய ஏழு பேர் உயிரிழந்தனர். ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாகவே அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால், உயிரிழந்தவர்கள் ஏற்கனவே இருதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவ கல்வி இயக்குனர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : பாடத்திட்டங்களில் இந்துத்துவ சனாதனக் கருத்துகள் திணிப்பு - வைகோ கண்டனம்