ETV Bharat / state

வேலூரில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் - வேலூரில் புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

வேலூர்: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் சார்பில், வேலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு, புற்றுநோய் விழிப்புணர்வு முகாம், காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக அரங்கில் நேற்று(பிப். 24) நடைபெற்றது.

புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
author img

By

Published : Feb 25, 2021, 4:16 PM IST

வேலூர் மாவட்டத்தில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் சார்பில், வேலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு, புற்றுநோய் விழிப்புணர்வு முகாம், காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக அரங்கில் நேற்று(பிப். 24) நடைபெற்றது.

இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுகார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் இதில் மருத்துவர்கள் கனகவேல், ராஜவேலு ஆகியோர் புற்றுநோய் குறித்து விளக்கவுரையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில், “பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதை உணர்ந்து, பெண் காவலர்கள் தங்கள் உடல் நிலையை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை, மார்பகம், தொண்டை ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புற்று நோய் பாதித்தவர்கள் மனம் தளராமல் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டு

அதன்படி சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். அதேபோல் 18 முதல் 19 வயது கருவுறும் பெண்கள் உடல் பலவீனம் அடைவதால் பிரசவத்தின்போது உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது, இதனை தடுக்க வழிவகை செய்ய வேண்டும்” என பேசினார்.

மேலும் இதில் சென்னை மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு, காவல் துறையினரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். பின் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை, குடும்ப உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.