ETV Bharat / state

16 வயது சிறுமிக்கு 41 வயது நபருடன் திருமணம்- சிறுமியின் தந்தை, மணமகன் கைது - குழந்தை திருமணம் செய்த மணமகன் கைது

வேலூரில் 16 வயது சிறுமிக்கு 41 வயதுடைய நபருடன் திருமணம் நடைபெற்றதையடுத்து, குழந்தையின் தந்தை, மணமகன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

16 வயது சிறுமிக்கு 41 வயது நபருடன் திருமணம்

author img

By

Published : Jul 17, 2021, 1:45 PM IST

வேலூர்: பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (40). இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதில் மகள் உள்ளார்.

இந்தச் சிறுமிக்கும், அணைகட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (41) என்பவருக்கும் நேற்று (ஜூலை 16) காலை பள்ளிகொண்டா பகுதியிலுள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், 16 வயது சிறுமிக்கு 41 வயதுடைய நபருடன் திருமணம் செய்து வைத்ததாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

மணமகன் கைது

இதைத்தொடர்ந்து நேரில் சென்று விசாரித்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் இது குறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 41 வயதுடைய மணமகன் சுரேஷ், சிறுமியின் தந்தை பொன்னுசாமி ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமிக்கும், அவரது வீட்டாருக்கும் ஆலோசனை வழங்கி எச்சரித்தனர்.

இதையும் படிங்க: சிறுமியை மிரட்டி திருமணம் - தாய்மாமன் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.