மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக ராணிப்பேட்டையில் உள்ள மத்திய அரசின் பெல் தொழிற்சாலையில் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலை வளாகத்தின் முன்பாக ஒன்று திரண்ட ஊழியர்கள் மத்திய அரசின் செயல்பாடுளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பொதுத்துறை பங்குகளை தனியார் மயமாக்குவதைத் தடுத்தல், நலிவடைந்த பொதுத் துறைகளை சீரமைக்க நிதி ஒதுக்குதல், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை கைவிடுதல், தொழிலாளர் விரோதப்போக்கை கைவிடுதல் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வால்பாறையில் பள்ளி மாணவி சடலமாக மீட்பு - கத்தியால் குத்திக் கொன்றதாக காதலன் வாக்குமூலம்