கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலின் போது கரோனா தொற்று அதிகரித்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் தொற்று பரவாத வகையில் தேர்தல் நடத்த சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால்அதனை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடிகள் (Auxiliary Polling Station) அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேலுர் மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1,301 வாகுச்சாவடிகளில், 1000 வாக்களர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாகப் பிரித்து கூடுதலாக 562 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பழுதடைந்த கட்டடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான உத்தரவின் அடிப்படையில் 40 வாக்குச்சாவடிகள் இடமாற்றமும், வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளின் பெயர் மாற்றப்பட்டதன் அடிப்படையில் ஆறு வாக்குச்சாவடிகளில் பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான அரசியல் கட்சியினர், பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படவுள்ளன. இதற்காக மாற்றம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், மாநகராட்சி, வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அதனை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியருமான சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவுக்கு கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது