சென்னை: சதி மற்றும் நாச வேலைகளில் ஈடுபட சிம்கார்டு வாங்கி கொடுத்த வழக்கில் என்.ஐ.ஏ காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட லியாகத் அலி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தன்னை வேலூர் சிறைச்சாலையில் வார்டன் மற்றும் காவலர்கள் அடித்ததாக நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின் பேரில் லியாகத் அலியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கவும் துறை ரீதியாக விசாரணை நடத்தவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் நிபா: உறுதி செய்தது கேரள அரசு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!