வேலூர் மாவட்டம் காட்பாடி திருநகர் பகுதியில் காட்பாடி- சித்தூர் நெடுஞ்சாலையில் பிரபலமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகம் இயங்கிவருகிறது.
இங்கு நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பின்பக்க கதவு, சுவரை உடைத்துக் கொண்டு மூன்று விலை உயர்ந்த செல்போன்களுடன் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் அந்த ஷோரூமுக்கு அருகில் உள்ள இன்ஸ்ப்ரேஷன் பேபி ஸ்டோரிலும் (குழந்தைகள் விளையாட்டு சாதன கடை) மூன்றாயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றிருக்கின்றனர்.
இத குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி துரைபாண்டியன், விருதம்பட்டு காவல் துறையினர் கை ரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக விருதம்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டுறவு வங்கித் தலைவர் மீது திருட்டு வழக்கு