ETV Bharat / state

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம்: ககன்தீப் சிங் பேடி தகவல் - அவசரகால விபத்து சிகிச்சை பிரிவு

Artificial Insemination Center: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம் அமைப்பது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருவதாக தமிழக மருத்துவத்துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

artificial insemination center at vellore government medical college hospital
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 9:48 PM IST

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம்

வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவ.13) நேரில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, அங்குள்ள அவசரக்கால விபத்து சிகிச்சைப் பிரிவு, காய்ச்சல் பிரிவு, பொது சிகிச்சைப் பிரிவு மையம், சலவைக் கூடம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். மேலும், நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம் அமைப்பதற்கான ஆலோசனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. தனியார் செயற்கை கருவூட்டல் மையங்களில் அரசின் விதிமுறைப்படி செயல்படாத மையங்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தவறு செய்யும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தீக்காயத்துடன் வந்த சிறுமிக்கு அங்குள்ள மருத்துவமனை பாதுகாவலர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பான புகார் குறித்து, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில், மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லை என்பது தெரியவந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது இந்தாண்டு தீக்காயங்கள் தொடர்பான பாதிப்பு குறைந்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், தீக்காயங்களின் அளவும் குறைந்து உள்ளது.

வருகாலங்களில் இது மேலும் குறையும். இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு சார்பில் அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சைப் பிரிவு மையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் சுத்தமான தண்ணீர் தேங்குவதால், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகிறது. அதனால் பொதுமக்கள் சுத்தமான தண்ணீரைத் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தாண்டு சுமார் 6 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்துக் குணமடைந்து உள்ளனர்.

மேலும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாகத் தமிழகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார். அப்போது, வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.பாப்பாத்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கோவையில் குவிந்த 1,350 டன் பட்டாசுக் குப்பைகள்..! அப்புறப்படுத்தும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.