வேலூர் மத்திய சிறையில் வழிப்பறி கொள்ளை வழக்கில் கைதாகி தண்டனை கைதியாக உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவர் ஆயுதப்படை காவலர் சுரேஷை கம்பியால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாதேஷ் வேறு ஒரு வழக்கு தொடர்பாக தேன்கனி கோட்டையில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நேற்றிரவு 12 மணி அளவில் மத்திய சிறைக்கு திரும்பியுள்ளனர். அப்போது தான் கழிவறை சென்று வருவதாக கூறிய கைதி மாதேஷ், திடீரென சிறை வளாகத்தில் இருந்த கம்பியை எடுத்து காவலரை தாக்கியுள்ளார். இவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தற்போது நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் சாலையில் தனியாக நின்ற மாணவியை மீட்டு வீட்டில் விட்ட வேலூர் எஸ்.பி!